Home Charity இரத்தினபுரி மாணவர்களது மாலை நேர பிரத்தியேக வகுப்புகள்

இரத்தினபுரி மாணவர்களது மாலை நேர பிரத்தியேக வகுப்புகள்

by Ananthy Ananthy
0 comment

மலையகம் இரத்தினபுரி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கனான கல்வித் தேவைகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை ஊடாக உதவிடும் செயற்பாடுகளுக்கான பண உதவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களுக்கான கொடுபனவுகளை சிறிகாந்தா, தர்மசீலி, கார்த்திகா இலங்கை ருபாய் 42.248,36 (200 euro) 22.07.2020 இல் அனுபிவைத்தனர்.  

ஒக்ரோபர் மாதம் இரண்டாவது தடவையாக இவர்கள் இலங்கை ருபாய் 42.769,42 (200 euro) 04-10.2020 இல் அனுபிவைத்தனர். இந்த இரு கொடுபனவுகளும் அங்குள்ள 150 மாணவர்களது மாலை நேர பிரத்தியேக வகுப்புகளுக்கான உதவியாகும். இந்த உதவியானது கொரோனா காலத்தில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடர வாய்ப்பளித்தது.

தேநீரும் சிற்றுண்டியும் செயற்றிட்டம் – 2020

காலை வேளையில் உணவு இன்றி வரும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியாக இக்கொடையளிப்பு இருப்பினும் காலத்தின் தேவை கருதி உங்களின் ஒப்புதலுடன்  இப்பணி பாடசாலை பெற்றோரின் ஒத்துழைப்புடன் அதிபரின் தலைமையில் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

இதனுடாக

தரம் 11 – 48 மாணவர்களும்

தரம் 10 – 53 மாணவர்களும்

தரம் 09 – 49 மாணவர்களும் பயன் பெறுகின்றனர்

கொரோணாத் தாக்கத்தின காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் இணையவழி மூலம் வாட்ஸ்அப் சூம் வகுப்புகள் என்பன இடம் பெற்றன. தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் தோட்டப்புறங்களில் இணைய வசதியின்மை காரணமாகவும் கணணி வசதி மற்றும் ஸ்மாட் போன் வசதி குறைவு என்பதினால் எம் மாணவர்களுக்கு இவ்விணையவழிக் கல்வியின் பயனை அடையமுடியாது போனது.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பாடசலையிலட மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை விடுபட்ட பாட அலகுகள் குறைநிரப்பி வகுப்புகளாக முன்னெடுக்கப்படுகின்றன. இப்பிரதேசம் குளிரிப்பிரதேசம் என்பதனால் மாணவர்கள் இரவு உணவினை உட்கொள்ள தாமதம் ஏற்படுவதாலும் இரவு 7 மணியளவில் பால்த் தேநீரம் பிஸ்கட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

இந்த திட்டமானது தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றத்தின் முன்னெடுப்பில் நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment