தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் அறுபத்தைந்து ஆயிரம் (ரூ65,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இத்தொகை இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் மலை உச்சியில் மக்கள் நடமாடும் பகுதியில் கொரோனா நோய் பரவலால் தடைபட்டுள்ள பள்ளிக்கூட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை நாவலர் பள்ளிக்கூடத்தின் மாணவர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை
- நன்கொடை வழங்கியோர்
- சுபாசினி
- ஆனந்தி
- பாலா லெனின்
- சிறிகாந்தா,
- தர்மசீலி,
- கார்த்திகா
- பிரேமச்சந்திரன்
சுபாஷினி, தலைவர் .