தமிழக எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களின் குறத்தியாறு காப்பிய அறிமுகக்கூட்டம் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் அரங்கவளாகத்தில் நடைபெற்றது. ஸ்டுட்கார்ட் தமிழ் அமைப்பின் தலைவர் மற்றும் ஈழத்தமிழர் சமூக செயற்பாட்டாளர் திரு.யோகா புத்ரா அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுப்பில் இந்த நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்.நா.கண்ணன் அறிமுக உரையாற்றினார். எழுத்தாளர் கௌதம சன்னா குறத்தியாறு நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
குறத்தியாறு முதல் நூலை ஆலயத் தலைவரும் பொறுப்பாளர்களும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கௌதம சன்னா அவர்களின் சாகித்ய அகாடமி வெளியீடான அயோத்திதாசப் பண்டிதர் நூலும் வெளியிடப்பட்டது.
ஐரோப்பிய சூழலில் இத்தகைய இலக்கிய அறிமுக உரைகள சிந்தனைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதாக அமைகின்றன.