தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பிரஞ்சு-தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: Les Bijoux Indiens du Pays Tamouls (இந்திய தமிழர்களின் நகை அணிகலன்களின் பெயர்கள் (பிரஞ்சு மொழி) – Journal Asiatiqueஆசிரியர்: M.Julien Winson ஜூலியன் வின்சன் பதிப்பு: Paris Imprimerie nationale வெளியிடப்பட்ட ஆண்டு: 1904
நூல் குறிப்பு:
Journal Asiatique என்ற சஞ்சிகையின் வெளியீடாக வந்த நூல் இது. இந்த நூலில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் வழக்கில் இருந்த தமிழர் அணிகலன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உடலின் வெவ்வேறு அங்கங்களில் அணியும் வகையில் அணிகலன்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
பெண்கள் அணியும் நகைகள்
- தலை நகைகள்
- காது நகைகள்
- மூக்கு நகைகள்
- கழுத்து நகைகள்
- இடுப்பு நகைகள்
- கை நகைகள்
- கால் நகைகள்
- தாலி உருவுகள்
ஆண்கள் அணியும் நகைகள்
- தலை நகைகள்
- காது நகைகள்
- மூக்கு நகைகள்
- கழுத்து நகைகள்
- இடுப்பு நகைகள்
- கை நகைகள்
- கால் நகைகள்
என்ற பிரிவுகளில் இவை பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 461 இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சாம் விஜய் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சாம் விஜய் அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. நூலை வாசிக்க! அன்புடன் முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]