கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக செய்கின்ற முயற்சிகள் பல. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக…..ஜெர்மனியில் நாம் 2019ஆம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிலைகள் நிறுவிய ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும், அதே வேளை பல பரிமாணங்களில் தமிழையும் தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையிலும் `அகம் புறம்` என்ற கருப்பொருளில் 6 மாத கால கண்காட்சியைத் தொடங்குகின்றோம்.
அதன் தொடக்க விழா 7.10.2022 – வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கும்
அதனை அடுத்து 8.10.2022 – சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜெர்மனி வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடவும், லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை விரிவாக்கவும் வருகை தந்தனர் –
மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை, தமிழக அரசு, தமிழ்நாடு.
திரு சந்திரமோகன் இஆபசெயலர் , தமிழக அரசின் சுற்றுலா, அருங்காட்சியகங்கள், பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம் தமிழுக்கு உலக அரங்கில் சிறப்பு சேர்க்கும் ‘அகம் புறம்’ கண்காட்சி 7.10.2022 – வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.
********
நாள்: 7.10.2022 வெள்ளிக்கிழமை-நேரம்: மாலை 5 லிருந்து 8 மணி வரைநிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:Linden MuseumHegelplatz 1, 70174 Stuttgart , Germany
நாள்: 8.10.2022 சனிக்கிழமை-நேரம்: காலை 10 லிருந்துநிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தின் முகவரி:Linden MuseumHegelplatz 1, 70174 Stuttgart , Germany
******
7.10.2022 வெள்ளிக்கிழமை – தொடக்க விழா
தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும் மாபெரும் கண்காட்சி ‘அகம் புறம்’. இதன் தொடக்க விழா ஏழாம் தேதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கண்காட்சி தொடக்க விழாவிற்கு முன்னதாகச் சிறப்பு விருந்தினர்களுக்குக் கண்காட்சி முழுமையாக விளக்கங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழ் மக்கள் மட்டுமின்றி உள்ளூர் ஜெர்மனி மக்களும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் இந்த தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
சிறப்புரை: மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு
https://www.facebook.com/subashini.thf/videos/3300606230215403/
வாழ்த்துரை: திரு.சந்திரமோகன் இஆப.
https://www.facebook.com/subashini.thf/videos/649033650210062/
நடன நிகழ்ச்சி
https://www.facebook.com/subashini.thf/videos/5818382681518752/
இந்த தொடக்க விழாவில் தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த தமிழக அரசின் தொழில்துறை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு அவர்கள் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் மாநிலச் செயலாளர் மற்றும் அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் தமிழ்நாட்டின் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
8.10.2022 சனிக்கிழமை – கண்காட்சி தொடக்க விழா
அகம் புறம் கண்காட்சி தொடக்க விழாவில்
டாக்டர் நோவாக்:
https://www.facebook.com/subashini.thf/videos/3232398477020552/
டாக்டர் முத்துக்குமாரசாமி:
https://www.facebook.com/subashini.thf/videos/657475995853361/
டாக்டர் சுபாஷிணி:
https://www.facebook.com/subashini.thf/videos/2076155072582819/
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களது வாழ்த்து செய்தி—-
‘அகம்-புறம்’ ஜெர்மனியில் நேற்று தொடங்கப்பட்ட ஆறு மாத கால கண்காட்சிக்கு வாழ்த்துக்களைக் கூறி இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஜெர்மனி லின்டன் அருங்காட்சியகத்திற்கும், இக்கண்காட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு. க ஸ்டாலின் அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தி இது.
இதன் ஆங்கில வடிவம் 7.10.2022 அன்று தமிழக அரசின் அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களால் நிகழ்ச்சி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது.
இதன் தமிழ் வடிவம் 8.10.2022 பொதுமக்களுக்கான தொடக்க விழாவில் தமிழ் மொழியில், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் க.சுபாஷிணி அவர்களால் வாசிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் ஜெர்மனியில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியைப் பாராட்டி ஊக்குவித்து வாழ்த்து செய்தி அனுப்பிய தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி பல!
முனைவர் க. சுபாஷினி
தலைவர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு