கொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இத்தொகை இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் மலை உச்சியில் மக்கள் குறைவாக நடமாடும் பகுதியில் கொரோனா நிவாரண நிதி கிடைக்காமல் அல்லல்படும் மக்களுக்காக வழங்கப்படுகின்ற நிதி உதவியாகும்.

இந்த நிதி உதவி வழங்கியதில் பங்கு கொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையினர்:

ஜெர்மனி
1. ஆசிரியர் சிவஞானம்
2. திரு.ஸ்ரீகந்தா குடும்பத்தினர்
3. திரு.கௌதம சன்னா
4. திரு. கார்த்தீஸ்வரன் காளிதாஸ்
5. திரு.கார்த்திக் சௌந்தரராஜன்
6. திரு.பாலலெனின்
7. முனைவர்.க.சுபாஷிணி

டென்மார்க்
1. திரு. தருமகுலசிங்கம்

நோர்வே
1. திரு.வேலழகன் மற்றும் நண்பர்கள்

ஒரு குடும்பத்திற்கு 600 ரூபாய் வீதம் பெறுமானமுள்ள ஒரு வாரத்திற்கான உணவுப்பொருட்கள் இத்தொகையிலிருந்து இலங்கை மலையகத்தில் 180 குடும்பங்களின் ஒருவார கால உணவுத் தேவைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று இத்தொகை அனுப்பப்பட்டு அவசரகால உதவிக்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் வழி இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

இதன் வழி மலை உச்சியில் தேயிலைத் தோட்டங்களில் பணி புரியும் 180 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உணவுத் தேவைக்கு நாம் உதவியிருக்கின்றோம்.

தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் செல்லவில்லையென்றால் அன்றைய சம்பளம் இல்லை என்ற நிலையில் இம்மக்கள் வாழ்கின்றார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த உதவித் தொகை பல குடும்பங்களின் அடிப்படை உணவுத் தேவைக்கான தற்காலிக உதவியாக அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மலையகப் பகுதி பொறுப்பாளர் ஆசிரியர் சிவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மேலும் தங்களது கூடுதல் நன்கொடை தொகையையும் சேர்த்து வாகனங்களை ஏற்பாடு செய்து உலர் உணவுப்பொருட்களை 80 குடும்பங்களுக்கு இன்று பகிர்ந்தளித்திருக்கின்றனர். நாளை மேலும் 100 குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை உணவுப் பொருட்களாகச் சென்றடையும்.

புகைப்படத்தில் உணவுப்பொருட்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுவதைக் காணலாம்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *