1.11.2019 அன்று தமிழ் நாடு நாள். அன்றைய தினத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் 4.12.2019 அன்று லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவரின் ஐம்பொன் உருவச் சிலைகள் வழியனுப்பும் விழா சிறப்புடன் நடைபெற்றது.