Home Events ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை

by admin
0 comment

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பான முதல் கட்ட பேச்சு இன்று நிகழ்ந்தது.   இந்த அருங்காட்சியகத்தில் 25,000 இந்திய அரும்பொருட்கள் பாதுகாப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியில் நுழைவாயிலில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளை திட்டமிட்டிருந்தோம். இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. ஆக்கபூர்வமான திட்டமிடல் இன்று நிகழ்ந்தது .என்னுடன் செயலாளர் திரு யோகா வந்திருந்தார். கிழக்காசிய நாடுகளின் அரும்பொருட்காட்சியக தலைமை அலுவலர் திரு. நோவாக் இதனை சாத்தியப்படுத்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் செயல்படுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.   இந்த ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட தேவையான நடவடிக்கைகளைத் தொடக்கியுள்ளோம்.. மேலதிக தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றேன்.   சில புகைப்படங்கள் அருங்காட்சியகத்தை பற்றி…  

You may also like

Leave a Comment