மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்

சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது  தமிழகத்தின் தரங்கம்பாடி.  தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள்,  அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன.  

  • ஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள். ஓலைச்சுவடி வடிவில் நாட்குறிப்புச் செய்திகள்.
  • காகித ஆவணங்கள்
  • தரங்கம்பாடி, மெட்ராஸ், கடலூர் ஆகிய பகுதிகளில் தமது நடவடிக்கையை விவரிக்கும் அறிக்கைகள்…

என இவை அனைத்தும் தமிழில் ஜெர்மானிய பாதிரிமார்களால் இன்றைக்கு 300 ஆண்டுகள் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.   இந்த வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வின் பின்னனி ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடத்துடன் (Francke Foundations (Franckesche Stiftungen))  நெருங்கிய தொடர்பு கொண்டது.     லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க்.   கி.பி.18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹாலே நகரில் உள்ள ஃப்ராங்கெ கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ (Prof. Francke)    தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கலாம் எடுத்த முடிவுதான்  தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.   அந்த வரலாற்று நிகழ்வினையும் இந்தக் கல்விக்கூடத்தின் சிறப்பினையும், இங்கு பாதுகாக்கப்படும் ஜெர்மானியப் பாதிரிமார்கள் கைப்பட எழுதி உருவாக்கிய தமிழ்ச்சுவடி நூல்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது இந்தப் பதிவு
யூடியூபில் காண:    https://youtu.be/OJ5P04UmiSE
 

அன்புடன்

முனைவர்.சுபாஷிணி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *