Home BranchesCzech மண்ணின் குரல்: அக்டோபர் 2015: பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி

மண்ணின் குரல்: அக்டோபர் 2015: பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.    ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். யாரோச்லாவ் வாட்சேக் அவர்களுடனான பேட்டியை இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.   ​

  ஐரோப்பாவில் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் இது என்ற பெறுமையையும் இந்தப் பல்கலைக்கழகம் பெறுகின்றது. தமிழும் சமஸ்கிருதமும் கற்றுக் கொடுப்பதோடு பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு போதிக்க வேண்டிய சூழ்னிலை காரணத்தால் மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர் மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற வகையில் தமது ஆய்வினை கொண்டு செல்கின்றார்.    பாரீசில் நடைபெற்ற ஐரோப்பாவில் தமிழ் என்ற மானாட்டில் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வும் மிகத் தேவை என்ற கருத்தை தனது மானாட்டு கட்டுரையில் முன் வைத்து அவர் பேசினார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.   மிக எளிய வகையில் தமிழ் மொழியில் உரையாடக் கூடிய திறனும் பெற்றவர் இவர்.  அவரை கடந்த 11.10.2015 அன்று பாரீஸ் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பேட்டி பதிவு செய்டிருந்தேன்.   ஏறக்குறைய 15 நிமிடப் பதிவு இது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பயிலும் மாணவர்க்ள் தமிழர் மொழி, பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களைப் பேசியிருக்கின்றோம். அவை 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்பட ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Ili0mii42U8&feature=youtu.be  

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!  

அன்புடன்

முனைவர்.க.சுபாஷிணி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment